×

கொரோனா வைரஸ் பீதி… டாஸ்மாக்குகளை மூடுவது எப்போது ?

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் எப்போது டாஸ்மாக்குகள் மூடப்படும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் எப்போது டாஸ்மாக்குகள் மூடப்படும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. அதே போல மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் திரையரங்கங்கள், விமான நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அந்த மஞுவில் ‘சென்னையில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. அந்த கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பார்கள் இயங்குவதால், கொரோனோ வைரஸ் பரவ 90 சதவீதம் வாய்ப்புள்ளது. எனவே, தமிழகம் முழுதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஏற்று விசாரித்த நீதிபதி ஒரு வாரத்துக்கு இது சம்மந்தமாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News