×

பேஸ்புக் முழுக்க கொரோனா வைரஸ் வதந்திகள் – அதிரடி நடவடிக்கை அறிவித்த மார்க்!

பேஸ்புக்கில் இருக்கும் கொரோனா வைரஸ் சம்மந்தமான தவறான தகவல்களை நீக்க இருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

பேஸ்புக்கில் இருக்கும் கொரோனா வைரஸ் சம்மந்தமான தவறான தகவல்களை நீக்க இருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் உருவாகி இதுவரை 250 பேரைக் காவு வாங்கியிருக்கிறது. மேலும் 9000 பேர் வரை தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதால் இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீனாவுடனான விமானப் போக்குவரத்தை பெரும்பாலான நாடுகள் துண்டித்து கொண்டுள்ளன. இதனால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சீனா மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 36 நாடுகளில் இந்த வைரஸ் தாக்கியவர்களைக் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி பல வதந்திகள் பேஸ் புக் மற்றும் வாட்ஸ் ஆப் போன்றவற்றில் பரப்பப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் நீக்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தங்கள் பிளாக்கில் தெரிவித்துள்ளது. எனவே பேஸ்புக்குக்கு உதவும் படி இதுபோன்ற போலியான தகவல்களை பார்த்தால் ரிப்போர்ட் செய்ய சொல்லி அறிவுறுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News