×

மாஸ்டருக்கு ஆப்பு வைத்த கொரோனா - கூறிய தேதியில் ரிலீஸ் ஆகுமா?
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
 

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் மார்ச்  31ம் தேதி வரை திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதி எப்போது முடிவடைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பது தெரியவில்லை. எனவே, திட்டமிட்டபடி மாஸ்டர் திரைப்படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால், திட்டமிட்ட படி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும். அதற்குள் நிலைமை சீராகும் என நம்புகிறோம். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களை மாஸ்டர் திரைப்படம் திரையரங்கிற்கு கொண்டு வரும் என நம்புகிறோம். எங்களை பொறுத்தவரை மாஸ்டர் வெளியீடு ஏப்ரல் 9ம் என்பதில் இப்போதுவரை எந்த மாற்றமும் இல்லை என மாஸ்டர் படக்குழு தெரிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News