×

குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு – சீனாவில் மீண்டும் பீதி !

சீனா மற்றும் ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

சீனா மற்றும் ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்றோடு கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8000 ஐ எட்டியுள்ளது. மேலு 2 லட்சம் பேர் வரை பாதிப்படைந்துள்ளனர். இந்த வைரஸால் முதன் முதலாக பாதிக்கப்பட்ட சீனாவில் இப்போது வைரஸ் பாதிப்புன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் சீன மக்களை பீதியூட்டும் விதமாக கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்கள்  14 சதவீதம் பேருக்கும் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவைப் போலவே ஜப்பானிலும் குணமடைந்த ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக மருத்துவர்கள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். இந்த செய்தியானது மக்கள் மத்தியில் பீதியை எழுப்பியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News