×

கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் மொத்த எண்ணிக்கை 1821 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று வரை  1755 ஆக இருந்தது.
 

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 34லிருந்து 41ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மொத்தமாக, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 94 பேர் குணமடைந்தனர். இதுவரை 960 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

அதேபோல், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,942ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 779 பேர் பலியாகியுள்ளனர். 5210 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 18,953 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

From around the web

Trending Videos

Tamilnadu News