×

இந்தியாவில் 28 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு.... 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உட்பட பல நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

இந்தியாவில் கொரொனா பரவலை தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 872 பேர் உயிரிழந்துவிட்டனர். அதேபோல் 6,185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News