×

தமிழ்நாட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் !

தமிழகத்தில் இருக்கும் சுற்றுலாப் பயணிகள் ஐவருக்கும் அவருடைய வழிகாட்டிக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த இரு தினங்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்று இரவு மதுரையைச் சேர்ந்த நோயாளி இறந்து முதல் உயிரிழப்பும் நிகழ்ந்தது.

இந்நிலையில் காலை வரை 18 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மேலும் 5 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேருக்கும் அவரது சென்னை வழிகாட்டிக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News