×

தமிழ் நாட்டின் கொரோனா நிலவரம்... உயரும் எண்ணிக்கையால் யாருக்கு ஆபத்து!

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வந்தாலும் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்வதால் நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது.

 

கொரோனாவால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உயிரிழப்புகள், அரசு எடுக்கும் நடவடிக்கைகள், ஊரடங்கு நிலவரங்கள் ஆகியவை குறித்து உடனுக்குடன் இந்த இணைப்பில் பார்க்கலாம்.

*சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் கடைபிடிக்கப்பட்ட நான்கு நாள்கள் பொது முடக்கம் நேற்று இரவுடன் முடிவுக்கு வந்த நிலையில் இன்று காலை காய்கறி வாங்க மக்கள் குவிந்தனர்.

*கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ, பழக் கடைகள் மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் சந்தை திறக்கப்படாததால் வியாபாரிகள் தர்ணா.

*தமிழகத்தில் நேற்று புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது.

*சென்னையில் மட்டும் 94 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேர், காஞ்சிபுரத்தில் 3 பேர், விழுப்புரத்தில் 2 பேர், திருவள்ளூரில் ஒருவர் ஆகியோருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


*நேற்று மட்டும் மொத்தமாக ஆண்கள் 64 பேருக்கும், பெண்களில் 41 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

*தமிழகம் முழுவதும் தற்போது 922 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களில் 82 பேர் நேற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

*கொரோனாவால் நேற்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News