×

கொரோனா வைரஸ் பாதிப்பு ; மக்கள் கூட்டமாக கூட வேண்டாம் : மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சீனாவில் கடந்த அண்டு டிசம்பர் மாதம் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது 25 நாடுகளில் பரவியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலால் 3 ஆயிரத்து 385 பேர் இறந்துள்ளனர். 98,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி தரும் விதமாக, இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. வெளிநாடுகளுக்கு சென்று இந்தியா திரும்பும் பயணிகளால் இந்த வைரஸ் பரவி வருகிறது. ஏற்கனவே 30 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு இந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை பொதுமக்கள் தவிர்க்கும் படியும், கூட்டமாக கூடும் நிகழ்ச்சிகள் இருந்தால் அதை தள்ளிப்போடுமாறும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News