×

செப்டம்பரில் முடிவுக்கு வரும் கொரோனா வைரஸ் தொற்று...!

கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதன் முதலாக சீனாவின் வுகான் நகரில் தென்பட்ட கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளை நிலைகுலைய செய்து வருகிறது. சுமார் 6 மாதங்களை கடந்தும் இந்நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

 

தற்போதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத இந்த நோயால் 4 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள். இதனால் அந்தந்த நாடுகளில் வேலை இழப்பட்டு ஏற்பட்டு பொருளாதாரம் அதிக அளவில் அடிவாங்கியுள்ளது. எனவே இந்த நோய் தொற்று எப்போது முடிவுக்கு வரும்..? அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாமல் மக்கள் அனைவரும் கதிகலங்கி வருகின்றனர்.

கொரோனா பாதிப்புகளில் உலக அளவில் 7ம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது இத்தாலியையும் முந்திக்கொண்டு 6ம் இடத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் செப்டம்பரில் முடிவுக்கு வரும் என சுகாதார அமைச்சகத்தின் நிபுணர்கள் இருவர் கணித்துள்ளனர். குறுகிய கால ஆய்வின் அடிப்படையில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையுடன், இறப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கைகள் சமநிலையை அடையும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வரும் என அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News