×

கொரோனா வைரஸ் அறிகுறி… சோதனைக்கு அனுமதிக்கப்பட்ட நபர் – மாடியில் இருந்து குதித்து தற்கொலை !

டெல்லியில் கொரோனா வைரஸ் அறிகுறிகளோடு இருந்த நபரை சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் அவர் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

டெல்லியில் கொரோனா வைரஸ் அறிகுறிகளோடு இருந்த நபரை சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் அவர் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பீதிக் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை விமான நிலையத்திலேயே வைத்து சோதனைகள் செய்யப்படுகின்றனர். அவ்வாறு சோதிக்கப்படும் நபர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா வைரஸ் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய 35 வயது பஞ்சாப் இளைஞர் ஒருவருக்கு அறிகுறிகள் இருந்ததால் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு 7 ஆவது மாடியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படும் அவர் நேற்று இரவு யாரும் எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது சம்மந்தமாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News