×

சிங்கம் போயி அடுத்து யானை... முதுமலை காப்பகத்தில் கொரோனா பரிசோதனை....

 
elephant

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பலவேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமுல்படுத்தியது.  எனவே, கொரோனா வைரஸ் பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. எனவே, தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபக்கம் மனிதர்கள் மட்டுமில்லாமல் விலங்குகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், வண்டர் உயிரியல் பூங்காவில் உள்ள 10 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பசியின்மை, சளித்தொந்தரவு இருந்த சிங்கங்களின் உடலில் இருந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில் இது தெரிய வந்துள்ளது. இந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து உயிரியல் பூங்கா மற்றும் விலங்குகள் காப்பகத்தில் விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. யானைகளிடமிருந்து மாதிரி எடுக்கப்பட்டு உத்திரபிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அந்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் யானைகள் ஏதேனும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரிய வரும்...

From around the web

Trending Videos

Tamilnadu News