×

ஜாதி மாறி காதல் திருமணம் செய்த ஜோடி... பெண்ணை கூண்டோடு தூக்கி சென்ற கும்பல்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேவுள்ள கவுந்தபாடியை சேர்ந்த செல்வன், குருப்பநாயக்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரை காதலித்து வந்துள்ளார்.
 

இருவரும் வேறு, வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர்களுக்கு திராவிடர் விடுதலை கழகத்தினர் மணமுடித்து வைக்க முன்வந்தனர். இதையொட்டி செல்வனும், இளமதியும் சேலம் வந்தனர்.

இந்நிலையில் காவலாண்டியூரில் நேற்று எளிமையாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த 40க்கும் மேற்பட்டோர் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் காதல் ஜோடியை கடுமையாகத் தாக்கினர்.

பின்னர் மணமக்கள் இருவரையும் அங்கிருந்து கடத்திச் செல்ல முயற்சி செய்து, இளமதியை கும்பல் கடத்திச் சென்றுவிட்டது. கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து இளமதியை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News