×

ஷங்கருக்கு தடையில்லை...லைக்கா தொடர்ந்த மற்றொரு வழக்கும் தள்ளுபடி...

 
shankar

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 திரைப்படம் ஒரு சில காரணங்களால் பாதியிலே நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் இப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களை இயக்க முடிவெடுத்தார்.

இதனால் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்கும் வரை அவர் மற்ற படங்களை இயக்க கொடுத்து என சில வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தது. சில நாட்களுக்கு முன்பு அதில் 2 வழக்கில் நீதிமன்றம் ஷங்கருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. எனவே, ஷங்கர் ராம்சரணை வைத்து இயக்கும் தெலுங்கு படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்லது. ஷங்கர் மீது லைக்கா நிறுவனம் தொடுத்திருந்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News