நேர்ல வர முடியாதுங்க ஜட்ஜ் ஐயா!.. விஜய் - சங்கீதா டைவர்ஸ் வாங்குற ஐடியா இல்லையோ?..
தமிழக முதலமைச்சரும், முன்னணி நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த மனுவில் இடம்பெற்றதாக கூறப்பட்ட சில விவரங்கள் பிப்ரவரி மாதத்தில் இணையத்தில் கசிந்து பெரும் விவாதத்தை கிளப்பின. இதையடுத்து இந்த விவகாரம் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறியது.
இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் நேரில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வழக்கை ஜூன் 15-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
அதன்படி இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகாமல், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அதற்கான தேவையான ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் விவரங்கள் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி, அவர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை.
மேலும், தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் மற்றும் யூகங்கள் பரவி வந்தன. இருப்பினும், இவை தொடர்பாக விஜய் அல்லது அவரது குடும்பத்தினர் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் மற்றும் திரையுலகில் ஒரே நேரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வரும் விஜய்யின் இந்த வழக்கு, அடுத்த விசாரணை நாளில் எந்த திசையில் நகரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
