×

நீதிமன்ற உத்தரவால் ஆடிபோன சிங்... ஆப்பு வைத்த அமலா பால்! என்ன நடந்தது!

நடிகை அமலா பால் அதோ அந்த பறவை போல படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கிறார். மலையாளத்தில் ஆடு ஜீவிதம் படத்தில் நடிகர் பிரித்வி ராஜூடன் நடித்துள்ளார். லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

 

கடந்த சில நாட்களுக்கு பாலிவுட் பாடகரும் தொழிலதிபருமான பவீந்தர் சிங் மற்றும் நடிகை அமலா பால் கடந்த 2019 ல் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

கடந்த மார்ச் மாதத்தில் தனக்கும் நடிகை அமலா பாலுக்கும் திருமணம் ஆகிவிட்டதாக கூறி அவர் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார்.

ஆனால் அமலா பால் தன் அனுமதியில்லாமல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். திருமணம் நடைபெறவில்லை என் கூறி எதிர்ப்பு தெரிவிக்க புகைப்படங்கள் நீக்கப்பட்டன.

பின் அமலா பால் பவீந்தர் சிங் மீது நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம அமலா பாலின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட பவ்னீந்தர் சிங்குக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் வரும் டிசம்பர் 22 ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News