×

இதனால்தான் திருமணமே செய்து கொள்ளவில்லை!.. கோவை சரளா வாழ்வில் இவ்வளவு சோகமா?....

 
இதனால்தான் திருமணமே செய்து கொள்ளவில்லை!.. கோவை சரளா வாழ்வில் இவ்வளவு சோகமா?....

தமிழ் சினிமாவில் 25 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் கோவை சரளா. துவக்கத்தில் கதாநாயகிகளின் தோழியாக நடித்தவர், பின்னர் எஸ்.எஸ். சந்திரன், செந்தில், கவுண்டமனி ஆகியோருடன் காமெடி வேடங்களில் நடித்தார். தற்போதும் நகைச்சுவையில் இவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. தமிழ், தெலுங்கு என ரவுண்டு கட்டி அடித்து வருகிறார். 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

59 வயது ஆகியும் கோவை சரளா திருமணமே செய்து கொள்ளாமல் தனியாகவே வசித்து வருகிறார். இதற்கு காரணம் என்ன என்பதை சமீபத்தில் கோவை சரளா ஒரு பேட்டியில் கூறினார்.

எனக்கு 4 தங்கைகள் மற்றும் ஒரு தம்பி. அவர்களை வாழ்க்கையில் செட்டில் ஆக்கவே நான் திரைப்படங்களில் நடித்தேன். அவர்கள் திருமணம் செய்து அவர்கள் குழந்தைகளை என் குழந்தைகளாக பார்த்தேன். என்னுடைய வாழ்க்கையை அவர்களுக்காகவே அர்ப்பணித்துவிட்டேன். எனவே, எனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசையே வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் கோவை சரளா தொடர்ந்து உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் கோவை சரளாவின் சொந்த வாழ்க்கை தியாகத்தால் நிறைந்தது..

From around the web

Trending Videos

Tamilnadu News