Vijay: விஜய் அந்த இடத்தில் உட்காரணும்!.. கண்டிப்பா நடக்கும்!.. கோவை சரளா ஃபீலிங்!...
40 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வருபவர் கோவை சரளா. சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. குறிப்பாக எம்ஜிஆரின் தீவிர ரசிகை இவர். அவரின் படங்களை பார்த்துதான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையை இவருக்கு வந்ததாக பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட சில படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. செந்தில், கவுண்டமணி, எஸ்.எஸ் சந்திரன் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களிலும் நடித்திருக்கிறார். மனோரமாவை போலவே காமெடி மற்றும் குணச்சித்திர நடிகையாக கலக்கும் நடிகை இவர். இவரின் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் இடம் பெற்றிருந்த காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவர் பேசும் கோவை மொழி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.
கோவை சரளா திருமணமே செய்து கொள்ளவில்லை. இது தொடர்பாக ஒருமுறை பேட்டியில் பேசிய அவர் ‘ பிறக்கும்போது தனியாகத்தான் பிறக்கிறோம். இறக்கும்போது தனியாகவே போகிறோம். இடையே இந்த உறவு தேவையில்லை என தோன்றியது. சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைத்ததால் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என சொல்லியிருந்தார். மேலும் திருமணமாகி குழந்தைகள் இருக்கும் பலரையும் அவர்களின் குழந்தைகள் பார்த்து கொள்ளாமல் தனிமையில் வசிக்கிறார்கள். எனக்கு யாரையும் சார்ந்து வாழ விருப்பமில்லை’ என பேசி இருக்கிறார்.

இவர் நடிகர் விஜயுடன் மெர்சல் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய கோவை சரளா ‘விஜய் இப்படி பக்குவமா பேசுறத பாக்குறப்ப ரொம்ப வியப்பா இருக்கு. ஏன்னா ஷுட்டிங்கில் அமைதியாக, குழந்தை போல பேசுவார். இப்ப மொத்தமா ஆளே மாறிட்டாரு.. அரசியல் மேடைகளில் ஆவேசமாக பேசுகிறார்.. பார்க்கவே ஆச்சரியமாக இருக்கு.. எனக்கு ஒரு ஆசை இருக்கு.. அவர் ஒரு இடத்தில் வந்து உட்காரணும்னு.. அவரோட பொறுமைக்கும் அமைதிக்கும் கடவுள் நிச்சயம் அந்த இடத்தை கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்’ என பேசியிருக்கிறார்.
விஜய் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் முதல்வர் இருக்கையில் அமர வேண்டும் என்பதைத்தான் கோவை சரளா இப்படி சொல்லி இருக்கிறார்.
