×

லாஸ்லியா படத்தை பற்றி கிரிக்கெட் வீரர் சச்சின் போட்ட செம டுவிட்!

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

 

பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதுவும் முதல் படத்திலே பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக . "பிரண்ட்ஷிப்"  என்ற படத்தில் நடித்துள்ளார். ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கும் இப்படத்தை ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் காமெடி நடிகராக சதீஷ் நடிக்கிறார். "பிரண்ட்ஷிப்"  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 5ம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு பல தரப்புகளிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்த நிலையில் கிரிக்கெட் வீரர் சச்சின் இப்படத்தை குறித்து ட்விட் போட்டுள்ளார்.  " பிரன்ஷிப், இந்த படத்தை பார்க்க வேண்டும் " என ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News