Categories: Cinema News latest news

ஜடேஜாவுக்கு பிடித்த ஒரே தமிழ் பாடல்! அங்கேயும் நிக்காரு நம்ம கேப்டன் – அஸ்வின் கூறிய ரகசியம்

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல பந்துவீச்சாளராக இருப்பவர் ஜடேஜா. ஆனாலும் இப்போது ஆல் ரவுண்டராகவும் இருந்து வருகிறார். சமீபகாலமாக பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பி வருகிறார் ஜடேஜா. தற்போது ஐபிஎல்லில் சென்னை அணிக்காக மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார் ஜடேஜா.

jaddu1

கிரிக்கெட் மைதானத்தில் எப்போதும் ரசிகர்களை மிகவும் குஷியாக வைத்துக் கொள்பவர் ஜடேஜா. கேட்ச், எதிரணியில் ஒருவர் அவுட் ஆனாலோ அதை அவர் வெளிப்படுத்தும் விதம் பார்ப்போரை மிகவும் ரசிக்க வைக்கும். இந்த நிலையில் ஜடேஜாவை பற்றிய ஒரு ரகசியத்தை சக வீரரான அஸ்வின் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அஸ்வின் தமிழக்கத்தை சேர்ந்தவர். அதனால் அவருக்கு தமிழ் அத்துப்பிடி. ஒரு சமயம் வீரர்கள் அனைவரும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்களாம். அஸ்வின் எப்போதும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது தமிழில் அமைந்த படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டே ஒர்க் அவுட் செய்வாராம்.

அந்த சமயம் அதே போல் கேட்டுக் கொண்டிருந்தாராம். திடீரென ஜடேஜா உள்ளே வந்து தன்னுடைய ப்ளே லிஸ்டில் ஒரு பாடலை போட்டுக் கொண்டு கேட்டாராம். அந்தப் பாடல் விஜயகாந்த் நடித்த வானத்தைப் போல படத்தில் அமைந்த ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்ற பாடல்.

jaddu2

அஸ்வினுக்கு ஒரே ஷாக்காம். கேட்டதற்கு ஜடேஜா ‘என்னமோ இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது’ என்று கூறினாராம். அதன்பிறகு அந்தப் படத்தை பற்றியும் விஜயகாந்தை பற்றியும் ஜடேஜா கேட்டுத் தெரிந்து கொண்டாராம். மேலும் சில சமயங்களில் ஐபிஎல்லில் சென்னை அணி விளையாடும் போதும் இந்த பாடலை ரசிகர்கள் போட்டு மகிழ்வார்கள்.

இதையும் படிங்க : ஏ.ஆர் ரகுமானுக்கு முதல் படம் ரோஜா கிடையாது..! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே…

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini