×

மறைந்த இர்பான் கான்& ரிஷி கபூரைக் கேலி பேசிய விமர்சகர் – காவல்துறை அதிரடி நடவடிக்கை!

கடந்த மாதம் மறைந்த இந்தியாவின் முன்னணி நடிகர்களான இர்பான் கான் மற்றும் ரிஷி கபூர் ஆகியவர்கள் பற்றி இழிவாக பேசிய விமர்சகர் கமல் ஆர் கான் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் மறைந்த இந்தியாவின் முன்னணி நடிகர்களான இர்பான் கான் மற்றும் ரிஷி கபூர் ஆகியவர்கள் பற்றி இழிவாக பேசிய விமர்சகர் கமல் ஆர் கான் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புற்றுநோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த இர்பான் கான் மற்றும் ரிஷிகபூர் ஆகியவர்கள் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்நிலையில் இவர்களைப் பற்றி பிரபல விமர்சகர் கமல் ஆர் கான் தன் டிவிட்டரில் இழிவாக பதிவு செய்திருந்தார்.

ரிஷிகபூர் குறித்து ‘ ரிஷி கபூர் இறக்கக்கூடாது, ஏனென்றால் மதுபானக் கடைகள் விரைவில் திறக்கப்படவுள்ளது’ எனக் கூறியிருந்தார். அதே போல ‘இர்பான் கான் நிறைய தயாரிப்பாளர்களிடம் படம் நடிப்பதாக சொல்லி பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார்’ எனக் கூறியிருந்தார். இதையடுத்து அவர் மேல் புகார் அளிக்கப்பட, மும்பை போலிஸார் கமல் ஆர் கான் மீது 294 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News