×

பிரபல தொகுப்பாளினிக்கு நேர்ந்த கொடுமை - அனைத்தையும் இழந்த கணவர்!

சன் டிவியில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ‘சூப்பர் சேலஞ்ச்’ என்ற ஒரு காமெடி கேம் ஷோ ஒளிபரப்பானது. இந்த ஷோவை தொகுத்து வழங்கியவர் தான் தியா மேனன். இதனைத் தொடர்ந்து சன் டிவிலையே ஒளிபரப்பான இன்னொரு கேம் ஷோ ‘சவாலே சமாளி’. 2017-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த ஷோவையும் தியா மேனன் தான் தொகுத்து வழங்கினார்.

 

2016-ஆம் ஆண்டு கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட தொகுப்பாளினி தியா மேனன். பாரிஸ் நகரில் செட்டிலானார். இதையடுத்து டிவி நிகழ்ச்சிகளில் இருந்து பிரேக் விட்டுவிட்டார். கணவருடன் பாரிஸில் வாழ்ந்து வந்த அவர் ஒரு ஷாக்கிங்கான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், தன்னுடைய  லேட் டாப், ஐ போன், விலையுயர்ந்த ஆடைகள், பணம் என பலவற்றை வழிபோக்கர்கள் கொள்ளையடித்துவிட்டனர் என்றும் அவரது கணவரின் அலுவலக டாக்குமெண்ட்களையும், பாஸ்போர்ட் போன்ற வற்றையும் கொள்ளையடித்து சென்று விட்டார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும், இது குறித்து போலிஸில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கைகள் இல்லை என சோகமாக பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News