×

சிஎஸ்கே வீரர் ஹீரோவாக நடிக்கும் தமிழ்ப்படம்!

கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது சினிமாவில் சில முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும் இந்திய சினிமாவில் இதுவரை ஒரு கிரிக்கெட் வீரர் ஹீரோவாக நடித்தது இல்லை. அந்த பெருமை தற்போது ஹர்பஜன் சிங்கிற்கு கிடைத்துள்ளது

ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்க இருக்கும் தமிழ் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பிரண்ட்ஷிப் என்ற டைட்டில் வைத்துள்ள இந்த படத்தை ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் தயாரிக்கவிருப்பதாகவும், ஷாம் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சந்தானம் நடித்து வரும் ‘டிக்கிலோனா’ என்ற படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தற்போது ஹர்பஜன் சிங் ஒரு தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றதில் இருந்தே அவர் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்து உள்ளார் என்பதும் அவ்வப்போது தமிழில் டுவீட் செய்து தமிழ் மக்களை அசத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

From around the web

Trending Videos

Tamilnadu News