×

சஞ்சய் மஞ்சரேக்கரை வைத்து செய்யும் சி எஸ் கே – என்ன காரணம் தெரியுமா ?

சஞ்சய் மஞ்சரேக்கரை பிசிசிஐ வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சி எஸ் கே நிர்வாகம் டிவிட்டரில் கேலி செய்துள்ளது.

 

சஞ்சய் மஞ்சரேக்கரை பிசிசிஐ வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சி எஸ் கே நிர்வாகம் டிவிட்டரில் கேலி செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி வர்ணனையாளர்களில் ஒருவர் சஞ்சய் மஞ்சரேக்கர். இவர் கடந்த சில ஆண்டுகளாக பிசிசிஐ வர்ணனைக் குழுவில் அங்கம் வகித்து வந்தார். இவரது வர்ணனை பல சமயங்களில் சர்ச்சைகளையே உண்டாக்கியுள்ளது. இந்தியா மற்றும் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் ஜடேஜாவை இவர் துண்டு துக்கடா வீரர் எனக் கூறியது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவாக பேசுவதாக சி எஸ் கே ரசிகர்கள் கோபத்தில் இருந்தன. இந்நிலையில் இப்போது. இப்போது அவர் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே காத்திருந்தது போல சிஎஸ்கே அணி ட்விட்டரில் ‘இனிமேல் இந்த துண்டு துணுக்கோட மொன்னையான வர்ணனை ஆடியோவை கேட்க வேண்டிய தேவையிருக்காது’ எனத் தெரிவித்து ஒரு டிவிட்டை போட்டுள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் குஷியாகி கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News