×

மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஏற்கனவே மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

ஊரடங்கு முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இந்த ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா இல்லை நீட்டிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்து வந்தது.

இந்நிலையில், இன்னும் 2 வாரங்களுக்கு, அதாவது மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதேநேரம் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்து சேவை இயக்கப்படும் எனவும், மற்ற படி மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், சமூக, அரசியல், பண்பாட்டு ரீதியிலான விழாக்களுக்கு தடை தொடர்ந்து நீடிக்கும் எனவும், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அடுத்த 21 நாட்களுக்கு இயங்காது எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமுல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News