Categories: Cinema News latest news

இப்பதான் புதுசா பாக்குற மாறி பாக்குரிங்க..! போங்கப்பா போய் வேலைய பாருங்க.

புன்னகை அரசி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அஜித், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். சுசிகணேசன் இயக்கிய விரும்புகிறேன் திரைப்படத்தில் அறிமுகாமனவர் நடிகை சினேகா. குடும்பக் குத்துவிளக்கு போல இருக்கும் முகம், சிரித்தால் கொள்ளை அழகு என்பதால் ரசிகர்களுக்கு இவரை பிடித்துபோனது.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சினேகா, அவ்வபோது போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசீகரா, வசூல் ராஜா MBBS, ஆட்டோகிராஃப் என பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக சிறந்து விளங்கினார்.

தனது இன்ஸ்டா பக்கத்தில் சினேகா பிரசன்னாவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இருவருமே இன்னமும் இளமை கொஞ்சும் அழகுடன் தனது பயணத்தை தொடர்கின்றனர்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini