×

அரிவாளால் கேக் வெட்டி கொண்டாட்டம் : புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கதி

சென்னை மாங்காடு அருகே நடந்த திருமண கொண்டாட்டத்தில் அரிவாளால் கேக் வெட்டிய மணமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

சமீபத்தில் ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது. புது மணமகன் மற்றும் மணப்பெண் மேடையில் நிற்க மணமகனின் நண்பர்கள் ஆர்ப்பரிக்க, மணமகன் கேக்கை வெட்டினார். ஆனால், கையில் பெரிய கத்தியால் அந்த கேக்கை வெட்டியதுதான் சர்ச்சையாக மாறியது. இந்த வீடியோ வைரலாக இதுபற்றி போலீசார் விசாரணை செய்தனர்.

அதில், சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள மாங்காடு பகுதியில் நடந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அந்த மணமகனை தற்போது போலீசாரை கைது செய்துள்ளனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News