மீண்டும் ரசிகர்களை பயமுறுத்த வருகிறது 'பீட்சா 4'... மோஷன் போஸ்டரை வெளியிட்ட சி.வி.குமார்!
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் 'பீட்சா'. ஹாரர் ஜானர் படமான இதை சி.வி.குமாரின் 'திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.
'பீட்சா'-வுக்கு கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்து 'பீட்சா 2, பீட்சா 3' ஆகிய படங்களை வெவ்வேறு இயக்குநர்கள், நடிகர்களை வைத்து தயாரித்தார் சி.வி.குமார். தற்போது, மீண்டும் ரசிகர்களை பயமுறுத்த 'பீட்சா 4' படத்தை கொண்டு வருகிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார்.
இதன் மோஷன் போஸ்டரை இன்று ரிலீஸ் செய்துள்ளனர். சி.வி.குமாரே கதை, திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்தை ஶ்ரீஷ் விஜய் என்பவர் இயக்குகிறார். இதில் ஹீரோவாக பிரஜின் நடிக்கிறார்.
மேலும், முக்கிய வேடங்களில் அனீஷ் முஹம்மது, விஜய் ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கு யோகராஜ் வசனம் எழுதுகிறார், ஹரிஹரன் ஆனந்தராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.
A new chapter of fear begins... 🍕🔥
— C V Kumar (@icvkumar) June 29, 2026
The legacy continues as #Pizza4 is officially launched!
Get ready for a spine-chilling cinematic experience
Stay tuned for more updates! 👀
🔗 https://t.co/PHaCS4bTjl
A @icvkumar Production
A @ThirukumaranEnt Production pic.twitter.com/6XjLjM2fsj
