CWC: குக் வித் கோமாளியில் சில்மிஷம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்… கூட சேர்ந்த விஜய் பிரபலம்!
CWC: பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கிய நடுவரான மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று கசிந்து வருகிறது.
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முதல் நான்கு சீசன் எந்த வித பிரச்னையும் இல்லாமல் நடந்தது. கிட்டத்தட்ட பலரின் மன அழுத்தத்தை போக்கி டிப்ரஷனில் இருந்து வெளியே அழைத்து வரும் நிலைக்கு இருந்தது.
ஐந்தாவது சீசனில் இருந்து நிகழ்ச்சியின் தயாரிப்பு குழு வெளியேற பிரச்னை பத்திக்கொண்டது. இரண்டு நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமு என இருவருமே வெளியேற இருப்பதாக வீடியோ போட்டனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் தாமு பின் வாங்கினார்.
அவரை வைத்துக்கொண்ட புதிய நிறுவனம் மாதம்பட்டி ரங்கராஜை கடந்த சீசன் இறக்கியது. தன்னை தக்க வைத்துக்கொள்கிறேன் பேர்வழி என அவர் செய்த பஞ்ச் கடுப்பை கிளப்பினாலும் இருக்க இடம் தெரியாமல் கடந்த சீசனை முடித்து கொண்டார்.
ஆனால் இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே ஓவர் அலம்பல் செய்து கொண்டு இருந்தார். இதில் அதிர்ச்சியாக அவரின் இரண்டாவது திருமணம் சர்ச்சையை கிளப்பியது. பிரபல காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிறிஸில்டா என்னை அவர் திருமணம் செய்துக் கொண்டு இரண்டு வருடமாக வாழ்ந்து வருகிறார்.
எங்களுக்கு குழந்தை பிறக்க போகிறது என அவர் அடுக்கடுக்காக விஷயங்களை உடைக்க ஆனால் மாதம்பட்டி தரப்பு வாய் திறக்கவே இல்லை. அதுவே ஒரு பிரச்னையாக உலாவி கொண்டு இருக்கும் நிலையில் இன்னொரு அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது. நிகழ்ச்சியின் முதல் பைனலிஸ்ட் ஷபானாவிடம் மாதம்பட்டி ரங்கராஜ் வரம்பு மீறி நடந்து கொள்வதாக தகவல்கள் கசிந்து வருகிறது.
இவர் மட்டுமல்லாமல் குரோஷியும் இவருக்கு நைட் நேரத்தில் தவறாக மெசேஜ் அனுப்பி வருவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதன் காரணமாக இந்த வார இறுதி எபிசோட்டில் ஷபானா தன்னுடைய வெப்சீரிஸ் புரோமோஷனுக்கு வந்தாலும் ரங்கராஜ் மற்றும் குரோஷியை தவிர்த்ததை பார்க்க முடிந்தது.
கூடா நட்பு கேடில் முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப ரங்கராஜால் தன்னுடைய அழிவை நோக்கி செல்கிறார் குரோஷி என நெருங்கிய வட்டாரத்தில் பேச்சு அடிப்பட்டு வருகிறதாம். பைனாலேவில் ஷபானா கலந்துக்கொள்ள தயக்கம் தெரிவிக்கும் நிலையில் அவருடன் சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
அடுத்த சீசனில் இந்த நிகழ்ச்சியின் பேரை காப்பாற்றிக்கொள்ள ரங்கராஜை தூக்குவதை தவிர வேறு வழியில்லை. இதனால் தான் இந்த சீசனில் இருந்தே இன்னொரு செஃப்பை சிறப்பு விருந்தினராக அழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
