Categories: Cinema News latest news

சிவகார்த்திகேயன் எப்படிப்பட்டவர் தெரியுமா?.. டி. இமானை தொடர்ந்து அவரது முதல் மனைவி ஓபன் பேட்டி!..

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டார் என இசையமைப்பாளர் டி. இமான் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இசையமைப்பாளர் இமானின் விவாகரத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தான் காரணமா? என சமூக வலைத்தளங்களில் சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு டி. இமானின் மனைவி அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் பற்றியும் இமான் குறித்தும் பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நல்ல மனிதர் என்றும் தன்னை விவாகரத்து செய்ய இமான் முடிவு செய்ததை அறிந்து சமரசம் பேச மட்டுமே அவர் வந்தார் என்றும் ஆனால், ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்ய அனைத்து வேலைகளையும் செய்து வைத்திருந்த இமான் நடிகர் சிவகார்த்திகேயனின் பேச்சையும் கேட்காமல் தன்னை விவாகரத்து செய்து விட்டார் என்றும் இமானின் முதல் மனைவி மோனிகா பேட்டி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: இணையத்தில் கசிந்த லியோ படத்தின் கதை? அப்போ சஞ்சய் தத்துக்கும் விஜய்க்கும் இந்த உறவு தானா?

தான் இப்போது தனது மகள்களுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறேன் என்றும், சுமார் 30 பேருக்கு சம்பளம் கொடுக்கக்கூடிய அளவுக்கு தொழில் செய்து சம்பாதித்து வருகிறேன். பட வாய்ப்புகள் பறிபோனதால் புலம்ப ஆரம்பித்துள்ள இமான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டும் நிம்மதியான வாழ்க்கை வாழவில்லை. அதனால் தான் இப்படி எல்லாம் பிதற்றிக் கொண்டு திரிகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நண்பர் என்கிற ரீதியில் எங்கள் விவாகரத்து நடைபெறாமல் இருக்க பஞ்சாயத்து பண்ண வந்த நிலையில், அவர் மீது தற்போது அபாண்டமான பழி விழுவதற்கு இமான் வழிவகுத்து விட்டார் என்றும் விளாசி உள்ளார்.

இதையும் படிங்க: உலக நாயகனை இப்படி பண்ணது நீ ஒருத்தன்தான்!.. விக்ரம் படத்தில் லோகேஷ் செஞ்ச வேலை!..

தன்னை கட்டாயப்படுத்தி விவாகரத்து பெற்றார். தனக்கு எந்த ஒரு ஜீவனாம்சமும் தரவில்லை. தன் தந்தையை கொன்று விடுவதாக மிரட்டி 48 நாட்களில் விவாகரத்து பெற்றார் என இமான் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் மோனிகா.

Saranya M
Published by
Saranya M