×

அப்பா Hospital'ல படுத்துட்டாரு சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க? தொடரும் கிண்டல்!

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர குடும்பமாக ஜொலிக்கும் அமிதாப் பச்சன்  குடும்பத்தில் ஜெயா பச்சனை தவிர அனைவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். முதலில் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். அதையடுத்து மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக ட்விட்டரில் அறிவித்தார்.

 

தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆராதனா என ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 4 பேருக்கு கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர்களது குடும்பத்தில் அனைவரும் குணமடைந்து மீண்டு வர ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு யாகம் செய்தனர்.

ரசிகர்களின் வேண்டுதலின் படி  ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் அபிஷேக் பச்சனிடம் இணையவாசி ஒருவர் தற்போது உங்களின் தந்தை மருத்துவமனையில் இருக்கிறாரே நீங்கள் எப்படி சாப்பிடுவீர்கள் என்று அப்பா அமிதாப் பச்சனின் பணத்தில் தான் அபிஷேக் பச்சன் வாழ்ந்து வருவதாக கூறி மறைமுகமாக கிண்டலடித்தார்.

அதற்கு அபிஷேக் பச்சன், "நாங்கள் இருவருமே மருத்துவமனையில் இருப்பதால் சேர்ந்து தான் சாப்பிடுகிறோம் என நெத்தியடி பதில் கொடுத்தார். இதனை சுதாரித்துக்கொண்ட அந்த நபர் விரைவில் குணமடையுங்கள் சார் பதிலளித்தார். அதற்கு அபிஷேக், எங்களை போன்ற சூழல் உங்களுக்கு ஒருபோதும் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன். பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள். உங்களின் வாழ்த்துக்கு நன்றி மேடம் என்று பதில் அளித்தார். அபிஷேக்கின் இந்த பதிவு ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News