×

டேய் வாடா! என் செருப்பை கழட்டு... ஆதிவாசி சிறுவனை அசிங்கமாக நடத்திய அமைச்சர்

இன்று காலை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவசன் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்றார். அங்கு யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்காக அவர் சென்றிருந்தார்.
 

அப்போது, கோவில் சாமி கும்பிட செல்லும் முன் அங்கு நின்றிருந்த ஒரு ஆதிவாசி சிறுவனை அழைத்து தனது செருப்பை கழட்ட சொன்னார். அப்போது அங்கு அரசு அதிகாரிகள் இருந்தனர்.

ஆதிவாசி சிறுவனை அழைத்து அமைச்சர் தனது செருப்பை கழட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மலைவாழ்/பழங்குடியின மக்களை அரசும் அதிகார வர்க்கமும் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயல்பாடு அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது!.. பதவி போதை! என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News