×

அருள்நிதியின் டைரி படத்தின் த்ரில்லிங் குறையாத மிரட்டும் டீசர்... 

திரில்லர் பாணியில் அமைந்துள்ள டீசரில் போலிஸ் அதிகாரியாக அருள்நிதி நடித்துள்ளார். 

 
d26d82bb-73a0-4602-951d-0e2560cf0ad6

தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடிக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் அருள்நிதி.

இவரின் வித்தியாசமான திரைக்கதை தேர்வுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக டிமாண்டி காலனி, கே 13, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற த்ரில்லர் படங்கள் அருள்நிதியை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

இந்த ஆண்டு வெளியான களத்தில் சந்திப்போம் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி அடைந்தது. அதை தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் டைரி படம் தயாரானது. படத்தின் முதல் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

திரில்லர் பாணியில் அமைந்துள்ள டீசரில் போலிஸ் அதிகாரியாக அருள்நிதி நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனராக பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த டிமாண்டி காலணி படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டைரி படத்தினை பைவ்ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோன் எத்தன் யோகன் இசையமைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News