×

ரூ 5000 கொடுத்தால் அரைகுறை ஆடையுடன் நடனம் – டிக்டாக் பிரபலத்தின் பேரில் மோசடி !

டிக்டாக் பிரபலமாக இருக்கும் இலக்கியா என்பவரின் பேரில் போலிக் கணக்குகள் உருவாக்கி பணமோசடி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

டிக்டாக் பிரபலமாக இருக்கும் இலக்கியா என்பவரின் பேரில் போலிக் கணக்குகள் உருவாக்கி பணமோசடி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டிக்டாக் உலகில் தன்னுடைய கவர்ச்சி நடனத்தால் பிரபலமானவர் இலக்கியா. இவருக்கு பல ஆயிரக்கணக்காக பின் தொடர்பாளர்கள் உள்ள நிலையில், இவர் பெயரில் உள்ள கணக்கில் இருந்து பலருக்கும் ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் 5000 ரூபாய் போட்டால் இரவில் தனியாக அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடப்படும் வீடியோ அனுப்பப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

இதைக் கேட்ட பல சபல பேர்வழிகளும் அந்த வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டுள்ளனர். ஆனால் சொன்னது போல வீடியோ எதுவும் வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த நபர்கள் இதுபற்றி இலக்கியாவிடம் கேட்க, அவரோ ’அது என்னுடைய அக்கவுண்ட் இல்லை… அதற்கு எனக்கும் சம்மந்தம் இல்லை’ எனக் கூறியுள்ளார். இதனால் போலி அக்கவுண்ட்டை நம்பி ஏமாந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News