×

புதுப்பேட்டை வெளியாகி 15 ஆண்டுகள் - கொண்டாடும் ரசிகர்கள்

 
pudhupet

செல்வராகன் - தனுஷ் கூட்டணியில் சில திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும் 2006ம் ஆண்டு மே 26ம் தேதி வெளியான திரைப்படம் புதுப்பேட்டை சென்னையில் வாழும் ரவுடிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து செல்வராகவன் இப்படத்தை இயக்கியிருந்தார். 

இப்படத்தில் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால், அழகம் பெருமாள், பாலா சிங் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அற்புதமான இசையை அமைத்திருந்தார். மறைந்த பாடலாசிரியர் முத்துகும்மார் சிறப்பான பாடல்களை எழுதியிருந்தார்.  பள்ளிக்கு செல்லும் சிறுவன் முதல் பெரிய ரவுடியாக மாறுவது வரை தனுஷ் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

pudhupet

மேலும், அரசியல்வாதிகள் ரவுடிகளை எப்படி பயன்படுத்துவார்கள்?. அந்த ரவுடிகள் அரசியலுக்கு வர விரும்பினால் அவர்களை அழிக்க என்னவெல்லாம் செய்வார்கள்? என்பதை இப்படத்தில் செல்வராகவன் தோலுரித்து காட்டியிருந்தார். இப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்திற்கு பின்னரே செல்வராகவன் ஒரு திறமையான இயக்குனராக சக இயக்குனர்களால் பார்க்கப்பட்டார்.

pudhupet

இப்போதும் இணையதளங்களில் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எப்போது வரும் எனக்கேட்டு செல்வராகவனிடம் ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர். இப்படம் வெளியாகி இன்றோடு 15 வருடங்கள் ஆகிவிட்டது. இதை தனுஷின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News