Categories: Cinema News latest news throwback stories

கே.எஸ்.ரவிக்குமாரின் கதையை அப்படியே சுட்டு பண்ன தனுஷ் படம்!.. என்னமா காப்பி அடிக்குறாங்க!…

சினிமா உலகில் ஒருவரின் கதையை அப்படியே சுட்டு கொஞ்சம் மாற்றி சிலர் படம் எடுப்பார்கள். கேட்டால் அது அவர்களின் கதை என்பார்கள். இது பல வருடங்களாக நடந்து வரும் விஷயம்தான். எம்.ஜி.ஆர் காலத்திலேயே பல ஹாலிவுட் படங்களை சுட்டு இயக்குனர்கள் இங்கே படம் எடுத்துள்ளனர். சில காட்சிகளை அப்படியே சுட்டு தமிழில் வைப்பார்கள்.

அதேபோல், ஒரு இயக்குனரின் இரண்டு திரைப்படங்களின் கதையை ஒன்றாக சேர்த்து ஒரு படமாக எடுத்த சம்பவங்களும் பலமுறை கோலிவுட்டில் நடந்துள்ளது. தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களின் கதையை ஒன்றாக இணைத்து ஒரு தனுஷ் படத்தை எடுத்துள்ளனர். இதை கே.எஸ்.ரவிக்குமாரே ஒரு கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

நான் எதிரி என ஒரு படம் எடுத்தேன். படத்தின் ஹீரோ மாதவன் ஒரு மணப்பெண்ணை கடத்துவதற்காக ஒரு திருமண மண்டபம் செல்வார். ஆனால், அவர் தவறுதலாக வேறு ஒரு பெண்ணை கடத்தியது பின்னர்தான் தெரியவரும்.

அதேபோல் விஜயை வைத்து நான் இயக்கிய மின்சார கண்ணா படத்தில் ‘தன் மகனின் காதலுக்காக ஒரு குடும்பமே ஏழைகள் போல் நடித்து கதாநாயகியின் குடும்பத்தில் வேலை செய்வார்கள். இந்த இரண்டையும் இணைத்து உருவான திரைப்படம்தான் உத்தமபுத்திரன். முதலில், தெலுங்கில் இதை காப்பி அடித்தார்கள். தெலுங்கு படத்தை வைத்து தமிழில் ‘உத்தம புத்திரன்’ எடுத்தார்கள் என கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

அட ஆமாப்பா!..

இதையும் படிங்க: சிம்பு இந்த இயக்குனருடன் இணைந்தால் இன்னும் டாப்ல வருவார்… பிரபல தயாரிப்பாளர் கொடுத்த டிப்ஸ்…

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா