Categories: Cinema News latest news

பாரதிராஜாவுக்காக தனுஷ் செஞ்ச வேலை!….ஹீரோக்கள் எல்லாம் அவர்கிட்ட கத்துக்கணும்….

தமிழில் மண்வாசனை மிக்க திரைப்படங்களை இயக்கியவர் பாரதிராஜா. இவர் இயக்கிய 16 வயதினிலே, மண் வாசனை, கடலோர கவிதைகள், கருத்தம்மா, முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே ஆகிய படங்கள் காலத்தையும் தாண்டி பேசப்படும் திரைப்படங்காளாக இருக்கிறது.

கிராம படங்களை எடுப்பதில் பலருக்கும் முன்னோடியாக இருந்தவர். அரங்குக்குள் மட்டும் எடுக்கப்பட்டு வந்த சினிமா படப்பிடிப்பை கிராமத்திற்கும், வயல் வெளிக்கும் அழைத்து சென்றவர். பல நடிகர்,நடிகைகளை அறிமுகம் செய்துள்ளார்.

தற்போது 80 வயதாகிவிட்டாலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதிலும், தனுஷுடன் அவர் நடித்து சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: அஜித் பைக் ரெய்டும் ஐடி ரெய்டும்!…ஏகே-61 படத்தின் பரிதாப நிலை!…லீக்கான ஷாக்கிங் நியூஸ்….

சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 வாரங்கள் ஆகியும் அவர் இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறார். ஐசியூவில் இருக்கும் அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது அவரை பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற தனுஷ் சுமார் 2 மணி நேரம் அவரின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்து, அவருக்கு உற்சாகத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார். அதுமட்டுமல்ல, மருத்துவமனை நிர்வாகத்திடம் ‘அவர் டிஸ்சார்ஜ் ஆனதும் மொத்த பில்லையும் எனக்கு அனுப்பி விடுங்கள். நான் செலுத்தி விடுகிறேன்’ எனக்கூறியுள்ளார். ஆனால், ஏற்கனவே வேறு ஒருவர் அதை செலுத்துவதாக கூறிவிட்டதாக மருத்துவமனை தெரிவித்ததாம்…

பொதுவாக சினிமாவுலகில் சீனியர் நடிகர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டால் ‘அப்படியா’ என பல நடிகர்களும் கடந்து விடுவார்கள்.

ஆனால், தனுஷ் செய்த இந்த காரியம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா