கோலிவுட்டின் நடிப்பு அசுரன் என அறியப்படும் நடிகர் தான் தனுஷ். அந்த அளவிற்கு தனது அசுரத்தனமான நடிப்பால் இதுவரை பல வெற்றி படங்களை வழங்கி சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார். இவரை போன்ற ஒரு சிறந்த நடிகர் இல்லை எனும் அளவிற்கு பலரும் தனுஷை புகழ்ந்து வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி ஒரு தமிழ் நடிகராக இருந்து கொண்டு ஹிந்தி, தெலுங்கு, ஹாலிவுட் வரை இவர் கால்பதித்துள்ளார். அந்த அளவிற்கு திறமை வாய்ந்த தனுஷின் வாழ்க்கையில் தற்போது போதாத காலம் போல. பாவம் அவருக்கு அடுத்தடுத்து அடிமேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக தனுஷ் அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். அதனை தொடர்ந்து தற்போது வரை சொந்த வாழ்க்கையில் தனுஷ் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை ஒருவர் வேறு தனுஷிடம் பட வாய்ப்பு கேட்டு ஓயாமல் டார்ச்சர் செய்து வருகிறார்.
இப்படி பல பிரச்சனைகளை மறக்கவும், அதில் இருந்து தன்னை திசை திருப்பவும் தனுஷ் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதன் மூலம் பிரச்சனைகளில் இருந்து தனது கவனத்தை திசை திருப்பலாம் என்பதே தனுஷின் எண்ணம். ஆனால் இதற்கும் தனுஷின் மாமியார் ஆப்பு வைத்து வருகிறாராம்.
ஆம் அதாவது ஐஸ்வர்யாவின் தாயான லதா ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு தனுஷிற்கு பட வாய்ப்பு கொடுக்காதீர்கள் என்று கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தனுஷின் கையிலிருக்கும் படவாய்ப்புகள் நழுவுவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாவம்ங்க அந்த மனுஷன் எவ்வளவு பிரச்சனைய தான் சமாளிப்பாரு.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…