Categories: Cinema News latest news

அந்த ரஜினி படம் ஃப்ளாப் ஆனதுக்கு காரணம் இதுதான்- இவ்வளவு ஓப்பனாவா பேசுறது!!

“யானைக்கும் அடி சறுக்கும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவருடைய பல திரைப்படங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. ரஜினிகாந்த் கனவுத் திரைப்படங்களாக உருவாக்கிய, “ஸ்ரீராகவேந்திரா”, “பாபா” ஆகிய திரைப்படங்களுமே தோல்வியடைந்தது. இதனால் ரஜினிகாந்த் மிகவும் வருத்தத்திற்குள்ளானார்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான “அண்ணாத்த” திரைப்படமும் தோல்வியடைந்தது. அதே போல் “அண்ணாத்த” திரைப்படத்திற்கு முன்பு அவர் நடித்த “தர்பார்” திரைப்படமும் தோல்வியடைந்தது. இவ்வாறு சமீபத்தில் வெளியான இரண்டு திரைப்படங்களுமே தோல்வியடைந்ததால் “ஜெயிலர்” திரைப்படம் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

தர்பார் படம் தோல்விக்கு காரணம்

இந்த நிலையில் “தர்பார்” திரைப்படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டுள்ளார். அதில் “தர்பார்” திரைப்படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“தர்பாரை பொறுத்தவரை ஒரு கட்டத்திற்கு மேல் இவ்வளவு எளிதாக ஸ்கிரிப்ட் எழுத வந்துவிட்டது என்ற தவறான புரிதல் எனக்கு இருந்தது. ரஜினி சார் அந்த ஆண்டு ஆகஸ்து மாதம் கட்சி தொடங்குவதாக இருந்தார். ஆதலால் மார்ச் மாதம் ஆரம்பித்து ஜூன் மாதம் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்த படத்தை எப்படியாவது ஹிட் ஆக்க வேண்டும் என்று ஒரு கணக்கு போட்டேன். அதில்தான் தவறு வந்துவிட்டது” என்று கூறியிருந்தார்.

Arun Prasad
Published by
Arun Prasad