×

அந்த பார்ட்டியில் பழைய காதலனுடன்.. சனம் ஷெட்டி பற்றி தர்ஷன் பகீர் பேட்டி

சனம் ஷெட்டி தன் மீது கூறியுள்ள அனைத்து புகார்களும் பொய் என பிக்பாஸ் புகழ் தர்ஷன் கூறியுள்ளார்.
 

பிக்பாஸ் தர்ஷனின் காதலி நடிகை சனம் ஷெட்டி நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், தனக்கும் தர்ஷனுக்கும் 2018ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், தர்ஷனுக்கு ரூ.15 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை என்பதை காரணம் காட்டி தன்னை தர்ஷன் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் புகார் கூறியிருந்தார். அதோடு, அவர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட பிரிவுகளில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், இதுபற்றி பத்திரிக்கையாளர்களிடம் தர்ஷன் அளித்துள்ள விளக்கத்தில் கூறியுள்ளதாவது:

நான் இலங்கையில் இருந்து சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தேன். ஒரு விளம்பர படத்தில் நடித்த போது சனம் ஷெட்டி பழக்கமானார். பல நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்து சென்றார். எனக்கு சில உதவிகளை செய்தார். நான்  மறுக்கவில்லை. நாங்கள் இருவரும் காதலித்தோம். என் பெற்றோருக்கு தெரியாமல் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டேன். பிக்பாஸ் வாய்ப்பு அவர் மூலம் கிடைக்கவில்லை. என்னுடைய போத்தீஸ் விளம்பரத்தை பார்த்து அந்த வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு சினிமா வாய்ப்புகள் பாதிக்கும் என்பதால் நாங்கள் இருவரும் காதலிப்பதையும், நிச்சயதார்த்தையும் வெளியே கூற வேண்டாம் எனக்கூறியதே அவர்தான். 

நான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பின் எந்த பெண்ணிடமும் நான் பேசக்கூடாது எனக்கூறினார். எங்கு போனாலும் அவரை அழைத்து செல்ல வேண்டும் எனக்கூறினார். திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தால் நான்தான் கதாநாயகியாக நடிப்பேன் எனக் கூறினார். அது எனக்கு பிடிக்கவில்லை. ஒரு பார்ட்டியில் அவரின் பழை காதலுடன் நெருக்கமாக இருந்தார். எனவே, அவரிடமிருந்து விலகினேன். தற்கொலை செய்து கொள்வேன் என பயமுறுத்தினார். உன்னை காலி செய்து விடுவேன் என மிரட்டினார்.  என் தங்கை திருமணம் செய்து முடித்த பின் நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றே என் அம்மா அவரிடம் கூறினார். 

என்னை புக் செய்த சில சினிமா கம்பெனிகளுக்கு சென்று என் பட வாய்ப்பை கெடுத்தார். எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நிச்சயதார்த்த செலவு 2.5 லட்சத்தை மட்டுமே நான் அவருக்கு தரவேண்டும். எனக்கு சில உதவிகள் செய்துள்ளார். அவர் மீது நான் புகார் கொடுக்க விரும்பவில்லை. எனக்கும் ஒரு தங்கை உண்டு.. ஆனால், கமிஷனர் அலுவலகத்தில் அனைத்து ஆதாரங்களையும் கொடுப்பேன்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News