×

மாமியாரைப் பழிவாங்க மகள்களுக்கு தண்டனை – மருமகள் செய்த கொடூர செயல் !

சேலத்தில் அடிக்கடி மாமியாருடன் சண்டை ஏற்பட்டதால் தனது கைக்குழந்தைகளைக் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார் ஒரு மருமகள்.

 

சேலத்தில் அடிக்கடி மாமியாருடன் சண்டை ஏற்பட்டதால் தனது கைக்குழந்தைகளைக் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார் ஒரு மருமகள்.

சேலத்தைச் சேர்ந்த மூலச்செங்கோடு எனும் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் இளையராஜா மற்றும் திவ்யா. இவர்களுக்கு வர்னிகா மற்றும் தன்ஷிகா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திவ்யாவுக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி சண்டை வருவது வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது.

இதையடுத்து திவ்யா மன விரக்தியில் தனது இரு குழந்தைகளையும் வீட்டுக்குப் பின்புறம் உள்ள கிணற்றில் வீசிவிட்டு தானும் குதித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். இந்நிலையில் எதேட்சையாக தோட்டத்துப் பக்கம் வந்த திவ்யாவின் மாமியார் கிணற்றுக்குள் இருந்து சத்தம் கேட்க, அங்கு எட்டிப்பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார்.

இதையடுத்து திவ்யாவின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து திவ்யா மற்றும் வர்ணிகாவைக் கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர். மருத்துவமனையில் சேர்த்த நிலையில் வர்ணிகா உயிரிழந்து விட்டதாகவும் திவ்யாவுக்கு முதுகுத் தண்டில் பலத்த அடி பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் சொல்லியுள்ளனர். பின்னர் கிணற்றில் தேடி தன்ஷிகாவின் உடலையும் ஊர்க்காரர்கள் எடுத்துள்ளனர்.

இந்த சம்பவமானது அந்த பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News