×

மகளுக்கு வந்த விபரீத ஆசை!.. கையை பிசையும் ரஜினி... இதெல்லாம் நடக்குமா?...

 
rajini

தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே சூப்பர் ஸ்டார் இருக்கையில் அமர்ந்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமா நடிகர்களில் ரூ.100 சம்பளம் வாங்கும் ஒரே நடிகர். 70 வயதை நெருங்கிவிட்டாலும் அதே துள்ளல், இளமை என ரஜினி வலம் வருகிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் அவர் நடித்து வருகிறார்.

rajini

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு பின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்பட இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க ரஜினி முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

rajini

அதேநேரம் ரஜினியை வைத்து ஒரு கமர்ஷியல் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை அவரின் இளையமகள் சௌந்தர்யாவுக்கு இருக்கிறதாம். இவர் ஏற்கனவே ரஜினியை வைத்து ‘கோச்சடையான்’ என்கிற அனிமேஷன் படத்தை இயக்கினார்.

rajini

ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, எப்படியாவது ரஜினியை வைத்து ஒரு பக்கா மசாலா படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருக்கிறதாம். எனவே, எனக்கு கால்ஷீட் கொடுங்கள் என ரஜினியை அவர் நச்சரித்து வருகிறாராம்.

soundarya
soundarya

ரஜினி என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

From around the web

Trending Videos

Tamilnadu News