×

விஜய்யாகவே வந்து நின்ன டேவிட் வார்னர்... வெறித்தன வீடியோ

ஃபேஸ் ஆப்பைப் பயன்படுத்தி விஜய் நடித்த காட்சிகளில் தான் நடித்தது போன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் எடிட் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. 
 

கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரபலம். டிக் டாக் இருந்தபோது இவரின் வீடியோக்களுக்கு ரசிகர்கள் அதிகம். காமெடி, நடிப்பு, குடும்பத்துடன் டான்ஸ் என வார்னரின் அலப்பறைகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே இணையத்தில் இருக்கிறது. அல்லு அர்ஜூனின் வைகுண்டபுரம் படத்தில் இடம்பெற்றிருந்த பாடலுக்குத் தனது மனைவியோடு வார்னர் ஆடியிருந்த டான்ஸ் வைரலானது. 


இந்தநிலையில், ஃபேஸ் ஆப்பைப் பயன்படுத்தி விஜய் நடித்த காட்சிகளில் தான் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை வார்னர் எடிட் செய்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். சர்க்கார், மாஸ்டர், கத்தி படங்களில் விஜய் நடித்திருந்த ஆக்‌ஷன் காட்சிகள் தனது முகத்தை வெட்டி ஒருட்டியிருக்கிறார் வார்னர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நடிகர் யார்... ஒரு கேப்ஷன் கொடுங்கள் என்ற கமெண்டோடு டேவிட் வார்னர், அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். இதற்கு கமெண்டுகளும் லைக்குகளும் குவிந்து வருகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News