×

திருமணமான நாளாவது நாள்… தூக்கில் தொங்கிய பெண் – கணவரிடம் என்ன சொன்னார் ?

மதுரையில் கூட்டுறவு வங்கியில் வேலைப்பார்த்து வந்த தவச்செல்வி என்ற பெண் திருமணமான நான்காவது நாளே தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

 

மதுரையில் உள்ள அரசரடியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு கடந்தவாரம் தான் தவச்செல்வி என்ற பெண்ணோடு திருமணம் ஆகியுள்ளது. தவச்செல்வி கூட்டுறவு வங்கியில் வேலைப்பார்த்து வந்துள்ளார். தன் வேலைப்பற்றி கணவரிடம் கூறும்போது வேலை செய்யும் இடத்தில் அதிகமாக அழுத்தம் தரப்படுவதாக சொல்லியுள்ளார்.

இந்நிலையில் திருமணம் முடிந்த நான்காவது நாள் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் சொல்லப்பட்டு, அவர்கள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News