லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அசத்தினாரா?.. டிசி படம் எப்படி இருக்கு?.. ஹானஸ்ட் விமர்சனம்!..
அருண் மாதேஸ்வரன் படங்கள் என்றாலே ஸ்லோமோஷனில் தூங்க வைத்து நகரும் திரைக்கதையை பார்த்து பார்த்து இந்த முறையும் அப்படி ஒரு படத்தை தான் பார்க்கப் போகிறோம் என முன் முடிவுடன் தியேட்டருக்கு பெரிய ஹைப் இல்லாமல் போய் அமர்ந்த விமர்சகர்களையே தம்பி இது லோகேஷ் கனகராஜ் படம்ப்பா என தட்டி எழுப்பிவிட்டனர்.
இந்த படத்தில் உள்ள விறுவிறுப்பில் ஒரு பாதியாவது ரஜினிகாந்த் நடித்த மல்டி ஸ்டாரர் படமான கூலி படத்தில் இருந்தால் அந்த படம் அசால்ட்டாக 1000 கோடி வசூல் செய்திருக்கும். அனிருத் ஜெயிலர் 2வுக்கு முன்னதாக டிசி படத்திலேயே தனது பெரிய சம்பவத்தை செய்து சாய் அபயங்கரிடம் இருந்து ரசிகர்களை சற்றே காப்பாற்றியுள்ளார்.
பார்வதியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி வாம்மா மின்னல் என்பது போல வந்த வேகத்தில் செத்துப் போகிறார். பார்வதியை பறிகொடுத்த தேவதாஸ் சந்திராவுடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதை ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ரா ஆக்ஷன் படமாக அருண் மாதேஸ்வரன் கொடுத்துள்ளார்.
அனிருத் இசைக்காகவே 200 ரூபாய் கொடுத்து தியேட்டருக்குப் போய் இந்த டிசி படத்தை பார்க்கலாம். 2 மணி நேரம் 27 நிமிடமும் பட்டாசு தான்.
டிசி - பிளாக்பஸ்டர்!
ரேட்டிங் - 3.75