×

அன்பு ரகுமான்... உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை - வைரமுத்து

பாலிவுட் திரையுலகில் ஏ. ஆர். ரஹ்மான் புறக்கணிக்கப்பட்டது குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்.

 

இந்திய சினிமாத்துறையில் இசை ஜாம்பவானாக திகழ்ந்துகொண்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பல்வேறு ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மறைந்த நடிகர் சுஷாந்தின் தில் பேச்சாரோ படத்திற்கு இசையமைத்தது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் பேசிய அவர், இந்தி திரையுலகில் தனக்கு வரும் நல்ல பட வாய்ப்புகளை பறிக்க ஒரு கும்பல் காத்திருக்கிறது.  

தில் பேச்சாரோ படத்தின் இயக்குனர் என்னை சந்தித்த போது கூட பலரும் என்னை செல்ல வேண்டாம் என கூறி தடுத்தனர். மேலும், ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா, என்னிடைய தம்பி ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு தென்னிந்தியர் என்பதால் வட இந்திய சினிமாவில் ஆளுமை செலுத்துவதை அங்குள்ள சில கும்பல் விரும்பாமல் அவருக்கு வரும் பட வாய்ப்புகளை கெடுப்பதாக கூறியுள்ளார்.

ஏஆர் ரஹ்மானின் இந்த பேட்டி குறித்து தமிழ் திரையுலகினர் மற்றும் பிளைவுட்டின் சிலர் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர் அந்தவகையில் தற்போது கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,

அன்பு ரகுமான்!
 
அஞ்சற்க.
வட இந்தியக் கலையுலகம்
தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு
ஆண்மான்களை ஆதரிப்பதில்லை.
இரண்டுக்கும் உயிர்வாழும்
எடுத்துக்காட்டுகள் உண்டு.
ரகுமான்! நீங்கள் ஆண்மான்;
அரிய வகை மான்.
உங்கள் எல்லை
வடக்கில் மட்டும் இல்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News