×

திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் மறைவு – தொண்டர்கள் சோகம் !

திமுக வின் மூத்த தலைவரும் பொதுச்செயலாளருமான க அன்பழகன் நேற்று நள்ளிரவு உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

 

திமுக வின் மூத்த தலைவரும் பொதுச்செயலாளருமான க அன்பழகன் நேற்று நள்ளிரவு உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் கடந்த சில மாதங்களாக வயது மூப்புக் காரணமாக கட்சி செயல்பாடுகளில் ஈடுபடாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். அவருக்கு வீட்டிலேயே தனியாக செவிலியர்கள் நியமிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கு மீண்டும் உடல்நிலை மோசமானதை அடுத்து சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 98.

வரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். திமுக ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த தலைவர்களில் ஒருவரான அன்பழகனின் மறைவு திமுக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News