×

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்ட நடிகர்... பேரைச் சொன்னாலே அலறும் தயாரிப்பாளர்கள்

பிரபலமான நடிகரின் பெயரைச் சொன்னாலே கோடம்பாக்கத் தயாரிப்பாளர்கள் அலறுகிறார்களாம்.
 
சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்ட நடிகர்... பேரைச் சொன்னாலே அலறும் தயாரிப்பாளர்கள்

புதிய குழுவுடன் மிரட்டலான கதையை இயக்கிப் பிரபலாமனவர் அந்த நடிகர் கம் இயக்குனர். அதைத் தொடர்ந்து அவருக்கு நிறைய ஹீரோ வாய்ப்புகள் வரவே, ஒரு காலத்தில் பிஸியாக நடித்துத் தள்ளினார். ஆனால், அந்தப் படங்கள் எதுவும் நம்ம ஹீரோவுக்குக் கைகொடுக்கவில்லை. 


சரி இனிமே நாமளே தயாரிப்பில் இறங்குவோம் என புரடக்‌ஷன் கம்பெனி தொடங்கி படங்களைத் தயாரிக்கவும் செய்தார். ஆனால், அந்தப் படங்களால் வருமானம் பெருகுவதற்குப் பதிலாகக் கடன் கழுத்தை நெறிக்கும் அளவுக்குப் போயிருக்கிறது. அது பெரும் பிரச்சனையாக எப்போ வேணாலும் உருவெடுக்கலாம் என்கிறார்கள். 

அதனால், நடிகரின் பெயரைச் சொன்னாலே கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுகிறார்களாம். அவரை வைத்துப் படமெடுத்தால் ரிலீஸுக்குப் பிரச்சனைகள் வரலாம் என்பதால், தயாரிப்பாளர்கள் அவர் பெயரைச் சொன்னாலே அலறுகிறார்களாம். அதனால், நம்ம நடிகர் இடியாப்பச் சிக்கலில் தவிக்கிறாராம். 

From around the web

Trending Videos

Tamilnadu News