×

சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய அழகிரி - ஒத்த வார்த்தையில் டிவிட்

சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் நடிகை ஜோதிகா கோவில்களை பராமரிக்க செலவு செய்கிறோம், ஆனால் மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது. கோவில்களைப் போல் மருத்துவமனைகளும் பள்ளிக்கூடங்களும் முறையாக பரமாரிக்கப்படவேண்டும் என்பது போல் பேசினார்.
 

ஜோதிகாவின் பேச்சுக்கு ஒரு பக்கம் ஆதரவும் மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பின. மேலும், ஜோதிகாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதங்களை ஏற்படுத்தின. பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நடிகர் சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் அதில் ‘'கோவில்களை போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும்' என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள்.இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீக பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். 

நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காது கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் மகனான மு.க.அழகிரி தனது டிவிட்டர் பக்கத்தில் சூர்யாவின் அறிக்கயை பகிர்ந்து ‘சிறப்பு’ எனப்பதிவிட்டுள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதியும் ‘சிறப்பு’ என பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News