HEART BEAT 3 தொடரில் இருந்து விலகிய "ரீனா" - பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!
இணையவாசிகளிடையே மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்ற தொடர் தான் ஹார்ட் பீட் வெப் தொடர் . இது சீசன் 1 மற்றும் 2 என சீசன்களாக வெளிவந்து ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக இந்த இந்த வெப்தொடரில் பிரபல நடிகரான கார்த்திக் குமார் ஹீரோவாக நடித்திருந்தார் .

அவரது மகளாக ரீனா என்ற கேரக்டரில் தீபா பாலு நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக மிகப்பெரிய நட்சத்திர ஹீரோயின் கூட இந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ரீனா ரோலில் மிக அற்புதமாக நடித்துள்ளார் தீபா என பலரும் பாராட்டினார்கள்.
அந்த கேரக்டர் எமோஷனல் ஆக டச் செய்து விட்டது என ரசிகர்கள் புகழாரம் சூட்டினார்கள். மேலும் சிறந்த நடிகைக்கான விருதும் நடிகை தீபா பாலுக்கு கிடைத்தது. இப்படி இருக்க இந்த ஹார்ட் பீட் சீசன் 3 தொடருக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருந்தார்கள் .

ஜூலை மாதம் இறுதிக்குள் ஒளிபரப்பாகும் என கூறப்பட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த வெப்தொடரின் ப்ரோமோ வெளியாக உள்ள நிலையில் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தரக்கூடிய செய்தி கிடைத்திருக்கிறது.
ஆம் இந்த தொடரில் இருந்து நடிகை தீபா பாலு விலகி விட்டதாக அவரே தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அது குறித்து பதிவிட்டு இருப்பதாவது சில இடங்களில் சில மனுஷங்களை விட்டு போறது அவ்வளவு ஈஸி இல்ல. ஆனால் சில குட் பாய் நம்ம நல்லதுக்காக தான் ஆல்வேஸ் கிரேட்ஃபுல் மிக்க நன்றி ரீனா என பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் தீபா பாலு.
ஹார்ட்பீட் டீமுடன் தீபாவுக்கு ஏதேனும் பிரச்சனையா என்ன காரணத்திற்காக இவர் விலகி இருக்கிறார் என்பது குறித்த முழு தகவல் இன்னும் கிடைக்கவில்லை. எனினும் ரீனா இல்லாத ஹார்ட்பீட் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
